Also Watch
Read this
By: Manigandan Raja

நாகையில் கடையடைப்பு :
ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி இன்று நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் இந்து நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.
நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 10.30 மணிக்கு நாகை ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved