கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கிள்ளனூர் பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மண்டை உடைக்கப்பட்ட நபர், ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துரைப்பாண்டியன் மற்றும் அவரது மண்டையை உடைத்த கோவிந்தனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.