இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தொடர்பாக சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அதிபர் பதவிக்கு தமிழர்களின் பிரதிநிதியாக போட்டியிடும் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.