திருப்பூர் போயம்பாளையம் சக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் மூலவராக சக்தி விநாயகரும், பரிவார தெய்வங்களாக , துர்கா பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், வராஹி உள்ளிட்ட தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.முன்னதாக யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர், ஆலயத்தை சுற்றி வந்த பின் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.