news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒத்திவைக்கப்பட்ட ஏலம்
tv

Also Watch

tv

Read this

ஒத்திவைக்கப்பட்ட ஏலம்

கள்ளக்குறிச்சி

758

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
klk 3(1)

உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து ஏலதாரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

முன் பணத்துடன் வந்த ஏலதாரர்கள்

உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக 20க்கும் மேற்பட்டோர் 4 லட்ச ரூபாய் முன் பணம் கட்டி இன்று ஏலம் எடுப்பதற்காக நகராட்சிக்கு வந்துள்ளனர்.

திடீரென நிர்வாக நலன் கருதி பொது ஏலம் ஒத்தி வைப்பு

அப்பழுது நகராட்சி நிர்வாகம் திடீரென நிர்வாக நலன் கருதி பொது ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சடைந்த ஏலதாரர்கள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை நகராட்சி முன்பு போராட்டம் நடத்தி நகராட்சி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


சுமார் இரண்டு மணி நேரமாக போராட்டம்

சுமார் இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வருவாய் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி மறு தேதி அறிவிப்பு காண நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Link
தென்னை, வாழைக்கன்றுகள் துவம்சம்

தென்னை, வாழைக்கன்றுகள் துவம்சம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 18 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved