சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சிறுநீர் கழிக்க சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தியதற்காக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ஓட்டுநர் புகார் தெரிவித்தார். முத்துகுமார் என்பவர் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற போது, சிறுநீர் கழிப்பதற்காக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் 200 ரூபாய் கொடுத்து என்டரி போட்டுக் கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக முத்துகுமார் தெரிவித்தார்.