news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லூரி மாணவர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர்
tv

Also Watch

tv

Read this

கல்லூரி மாணவர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர்

தூத்துக்குடி

14

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut(1)

விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்களை காவல் ஆய்வாளர் மிரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர்
விளாத்திகுளம் வேட நத்தத்தில் +2 மாணவி பா*யல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அமைப்புகள் சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிந்தது.

மாணவர்களுக்கு ஆதரவாக பேசிய நாதக நிர்வாகி
சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் மதுரை வீரன் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களிடம் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவேன். பெற்றோர் செல்போன் நம்பரை கொடுங்கள் என கேட்டு மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் மாணவர்களுக்கு ஆதரவாக ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை எச்சரித்து கல்லூரிக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
இன்னும் OTP வரல சார்...

இன்னும் OTP வரல சார்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 13 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved