சேலம் மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் 52 வயதான சீனிவாசன் என்பவர், மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக பெற்றோர் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார். ஓவிய ஆசிரியர் சீனிவாசனை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.