கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, அதிகாலை நேரத்தில் குளத்தில் மணல் அள்ள வந்த 19 டெம்போ லாரிகள் மற்றும் 3 ஹிட்டாச்சி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாவல்காடு கிராமத்தில் உள்ள கல்கட்டு குளத்தில் காலை 7 மணிக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை 5 மணிக்கு வந்திருந்ததால் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.