இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் அரக்காசு அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஆயிரம் கிலோ ஆட்டுக் கறி மற்றும் 2 ஆயிரம் கிலோ அரிசியைக் கொண்டு மணக்க மணக்க அசைவ விருந்து சமைக்கப்பட்டு சமபந்தி நடைபெற்றது. இந்துக்கள் மட்டுமே வசித்து வரும் இக்கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரக்காசு எனும் இஸ்லாமிய பெண்ணின் மறைவுக்கு பிறகு அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில், அனைவருக்கும் அசைவ சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது.