திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.பௌர்ணமியையொட்டி, கிரிவலம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தேரடி வீதியில் உள்ள நுழைவாயிலில் குவிந்தனர். வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு போதிய வசதிகள் இல்லாதால் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வரும் காலங்களில், பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக நுழைவாயிலில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.