திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.பட்டத்திபாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியை அதே ஊரைச்சேர்ந்த சிவக்குமார் மற்றும் சேமலை ஆகியோர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்தாக கூறப்படுகிறது.இதனை தட்டிக்கேட்ட கணவர் சக்திவேலிடம் இருவரும் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதில், நிலைதடுமாறி அருகில் இருந்த சுவற்றில் மோதியதில் காயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சிவக்குமார் மற்றும் சேமலை ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.