சென்னை போரூர்-பூந்தமல்லி சாலையில் ஆட்டோவில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஐயப்பன்தாங்கலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், ஆட்டோவின் முன் சக்கரத்தை தூக்கியபடியும், பக்கவாட்டில் சாய்த்தபடியும் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பெரிய பணிச்சேரி பகுதியை சேர்ந்த XXX வேலு என்பவரை கைது செய்தனர்.