Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 09:40 AM
By: Fyrose Banu

நாகையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆந்திராவில் வழங்குவது போல் சாதாரணமான மாற்றுத்திறனாளிகளுக்கு 6,000 ரூபாயும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 10,000 ரூபாயும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 15,000 ரூபாயும் தமிழக அரசு வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தினால் நாகப்பட்டினம் -நாகூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved