Also Watch
Read this
By: Fyrose Banu

கோத்தகிரி கோடநாடு செல்லும் சாலையில் கேரட மட்டம், அதிகாலை நேரத்தில் கள்ளச் சந்தை மது விற்பனை செய்வதை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக்கை இடமாற்றம் செய்யுங்கள்
கோத்தகிரி அருகே உள்ள கேரட மட்டம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கிராமப் பகுதியில் உள்ளது பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் கடையில் இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை
இந்த நிலையில் தனியாரால் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதால் பெண்கள் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அதிகாலை நேரத்திலேயே படுஜோராக ரூ.150 மதிப்புள்ள மதுபாட்டில் 250 ரூபாய்க்கு கள்ளசந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுபாட்டில்களை வீசிய பொதுமக்கள்
மேலும் மதுபானங்கள் வேண்டுமென்றால் அருகில் உள்ள கள்ளச் சந்தைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக காவல்துறைக்கு புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனை கண்டித்து ஊர் பொதுமக்கள் பெண்கள் இளைஞர்கள் முற்றுகையிட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை வெளியில் எடுத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved