Also Watch
Read this
By: Web Team

சென்னையில் பெய்த கனமழையால், கொடுங்கையூர் எருக்கஞ்சேரியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், மழைநீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறியுள்ள அப்பகுதி மக்கள், கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களாக இந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், கொசுக்கடியிலும், இருளிலும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved