கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான வெப்பம் நிலவிய நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நண்பகல் வேளையில் அடர்ந்த பனி மூட்டமாக காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய துவங்கியது. கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. கொடைக்கானல், குறிஞ்சி நகர், பெருமாள் மலை, பேத்துபாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு மற்றும் பண்ணைகாடு, தாண்டிக்குடி போன்ற மலை கிராம பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.