news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பூட்டிக்கிடந்த மின்வாரியத்தை கண்டு பொதுமக்கள் அதிருப்தி
tv

Also Watch

tv

Read this

பூட்டிக்கிடந்த மின்வாரியத்தை கண்டு பொதுமக்கள் அதிருப்தி

குன்றத்தூர், காஞ்சிபுரம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்வெட்டால் அவதி

மின்வாரியத்தை கண்டு பொதுமக்கள் அதிருப்தி : 

குன்றத்தூர்   தரைப்பாக்கம் ஊராட்சியில் விக்னேஸ்வரா நகரில் மட்டும் தினந்தோறும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றிருந்தனர் .

அப்போது குன்றத்தூர் மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏறக்குறைய மூன்று மணி நேரமாக அங்கு காத்திருந்த பொதுமக்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதோடு, ஊழியர்களே இல்லாத.

அலுவலகத்தில் லைட், ஃபேன் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் தேவையற்று அலுவலகத்தின் இரண்டு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருந்துள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார் அளிக்க தொலைபேசியில் கூட புகார் அளிக்க முடியாமல் மின்வாரிய அலுவலகம் வந்தால் பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு ஆளே இல்லாத அலுவலகத்தில் மின்சாதன பொருட்கள் பயன்படுத்தி மின்சாரத்தை மின்வாரிய துறையே வீணடிப்பதாக வார்த்தையை விட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது
இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

இந்த விவகாரம் தொடர்பாக குன்றத்தூர் மின்வாரிய உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டபோது கோடை காலம் என்பதால் மின் பயன்பாடு அதிகரித்து அழுத்தம் ஏற்பட்டு பல்வேறு பகுதியில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாகவும் உதவி பொறியாளர் ஊழியர்கள் அதனை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால்.

மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததாகவும் இனிமேல் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Link
அம்மன் கோயிலைச் சுற்றி திறந்து விடப்பட்ட 12 காளைகள்

அம்மன் கோயிலைச் சுற்றி திறந்து விடப்பட்ட 12 காளைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
8 hrs 3 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved