கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த போதே பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தரமான முறையில் பேருந்து நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.