மல்லாக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரின் மேற்பார்வையில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்கின்ற வீடியாயோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.ஆசிரியரின் கொடூர செயல் கழிவறையின் வெளிப்பகுதியில் ஆசிரியை நின்று கொண்டு, கை, கால்களில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கழுவ சொல்லும் வீடியோவால் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதற்கு மத்தியில், இது போன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஆசிரியர் சமுதாயமே விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. Related Link நொய் தொற்று பரவும் அபாயம்