Also Watch
Read this
Posted on: Feb 07, 2026 09:26 AM
By: Manigandan Raja
குடும்பத்திற்காக ராப்பகலாக கஷ்டப்பட்டு உழைத்த கூலி தொழிலாளி. கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகிய மனைவி. கணவருக்கு விஷயம் தெரிந்ததால் வீட்டில் களேபரம். தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை இரவோடு இரவாக கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம். துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கபட நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? நடந்தது என்ன?
காவல் அவசர உதவி எண்ணுக்கு அழைத்த பெண்
விடிஞ்சதும் போலீஸுக்கு ஃபோன் பண்ண ஒரு பெண், நேத்து நைட்டு என் கணவர யாரோ அடிச்சு கொன்னுட்டாங்கன்னு சொல்லி கதறி அழுதுருக்காங்க. உடனே போலீஸ்காரங்களும் சம்பவ இடத்துக்கு போய், இறந்து கிடந்த சுப்பிரமணியோட சடலத்த கைப்பற்றி, போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம், சுப்பிரமணியனோட மனைவி இந்திராகிட்ட, உங்க கணவருக்கு என்னாச்சுன்னு விசாரிச்சிருக்காங்க. அப்போ, நேத்து நைட் என் கணவர் யார்கூடயோ சண்ட போட்டு ரத்தக்கறையோட வீட்டுக்கு வந்தாரு, என்னாச்சுன்னு கேட்டதுக்கு, என்ன சத்தம் போட்டுட்டு போய்ட்டாரு, காலையில பாத்தா வாய்க்கால்ல சடலமா கிடந்தாருன்னு சொல்லி கண்ணீர் வடிச்சிருக்காங்க.
சுப்பிரமணியன் மனைவி மீது போலீஸுக்கு எழுந்த சந்தேகம்
அதுக்கப்புறம், சுப்பிரமணியன யாராச்சு அடிச்சாங்களா, அந்த ஏரியாவுல, முந்துன நாள் நைட்டு ஏதாவது தகராறு நடந்துச்சான்னு ஏரியா மக்கள் கிட்ட விசாரிச்சிருக்காங்க. ஆனா, ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லன்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க சொல்லிருக்காங்க. இது, போலீஸுக்கு, சுப்பிரமணியனனோட மனைவி மீது சந்தேகத்த ஏற்படுத்திருக்கு. அதுக்கப்புறம், திரும்பவும் இந்திராகிட்ட விசாரிச்சிருக்காங்க. ஊருக்குள்ள எந்த பிரச்சினையுமே நடக்கலையே, பின்ன யாரு உன் கணவர அடிச்சிருப்பா, எங்க வச்சு பிரச்சினை நடந்திருக்கும்னு போலீஸ் கேட்டதுக்கு, அவர் வெளியூர் போய்ருந்ததா சொன்னாரு, ஒரு வேள அங்க வச்சு பிரச்சினை நடந்திருக்கும்னு நினைக்கேன் சார், ஆனா அவரு எந்த ஊருக்கு போனாருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிருக்காங்க.
விசாரணையில் உண்மையை சொன்ன மனைவி இந்திரா
சுப்பிரமணியனோட மனைவி இந்திரா நம்மல சுத்தல்ல விடப்பாக்குறாங்கன்னு புரிஞ்சிக்கிட்ட போலீஸ், அதுக்கப்புறம் அவங்கள ஸ்டேஷனுக்கு கூப்டு போய் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திருக்காங்க. ஒரு கட்டத்துல, போலீஸோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, இந்திரா நடந்த எல்லா உண்மையையும் ஒன்னு விடாம சொல்லிட்டாங்க.
இந்திராவுக்கு, சந்திரசேகருடன் ஏற்பட்ட தகாத உறவு
திருவாரூர், திருத்துறைப்பூண்டிய சேர்ந்த 50 வயசான சுப்பிரமணியனுக்கும், இந்திராவுக்கும் கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. இந்த தம்பதிக்கு நாலு வயசுல ஒரு குழந்தை இருக்கு. கூலி வேலை பாக்குற சுப்பிரமணியன, அடிக்கடி வெளியூருக்கு போய்ட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வருவாராம். அந்த கேப்ல, சுப்பிரமணியனோட மனைவி இந்திராவுக்கும், அதே ஏரியாவ சேர்ந்த சந்திரசேகர்-ங்குறவருக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவா மாறிருக்கு. சுப்பிரமணியன் வீட்டுல இல்லாத நேரத்துல, சந்திரசேகர வீட்டுக்கு வரவச்ச இந்திரா, அவர் கூட தனிமையில இருந்துருக்காங்க.
மனைவியின் தகாத உறவை தெரிந்ததும் ஆத்திரம்
தன்னோட மனைவிக்கு வேறொரு நபர்கூட தகாத உறவு இருக்குற விஷயம் தெரிஞ்சு கொதிச்செழுந்த சுப்பிரமணியன், மனைவிகிட்ட போய், எனக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியேன்னு கேட்டு சண்ட போட்டிருக்காரு. கோவத்துல கை நீட்டி அடிச்சிருக்காரு. கணவருக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு, இனிமே நம்ம இஷ்டத்துக்கு இருக்க முடியாதுன்னு நினச்ச இந்திரா, கணவர கொல்றதுக்கு முடிவு பண்ணிருக்காங்க. சம்பவத்தன்னைக்கு காதலன் சந்திரசேகருக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லிருக்காங்க. நைட் 12 மணிக்கு மேல, சுப்பிரமணியன் ஆழ்ந்து தூங்கிட்டு இருந்தப்போ, இந்திராவும் சந்திரசேகரும் சேந்து, சுப்பிரமணியனோட கழுத்தநெரிச்சுருக்காங்க. ஆனா, சுப்பிரமணி உயிரிழந்துட்டாரா இல்லையான்னு அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு. உடனே, வீட்டுல இருந்த இரும்பு கம்பிய எடுத்து, அவரோட தலையிலேயே ஓங்கி அடிச்சிருக்காங்க.
மனைவி இந்திராவை கைது செய்த காவல்துறையினர்
அதுல, சுப்பிரமணியோட உயிர் போய்ருச்சு. அதுக்கப்புறம், அவரோட சடலத்த பக்கத்துல உள்ள வாய்கால போட்ட இந்திரா, போலீஸுக்கு போன் செஞ்சு என் கணவர யாரோ அடிச்சு கொன்னுட்டாங்கன்னு சொல்லி நாடகமாடிருக்காங்க. விசாரணையில எல்லா உண்மையையும் தெரிஞ்சிக்கிட்ட போலீஸ், கணவனை கொன்ன மனைவி இந்திராவ அரெஸ்ட் பண்ணிட்டாங்க. தலைமறைவா இருக்குற சந்திரசேகர தீவிரமா தேடிட்டு இருக்காங்க. தகாத உறவுக்காக கணவன கொன்னுட்டு, தாய் ஜெயிலுக்கு போனதால, எதுவும் அறியாத நாலு வயசு குழந்தைதான் யாரும் இல்லாம பரிதவிக்கிற நிலைக்கு ஆளாகிருக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved