news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
tv

Also Watch

tv

Read this

பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பழனி, திண்டுக்கல்

Posted on: Mar 26, 2026 09:41 AM

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
palani temple

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. சேவல் மற்றும் மயில் உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

பழனி முருகனுக்கு அரோகரா
’​முருகனுக்கு அரோகரா' கோஷம் முழங்க, பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று, மார்ச் 26ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் குவிந்து வருவதால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், இன்று காலை பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி, பழனியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று, புனித தீர்த்தம் எடுத்து, பழனிக்கு வருகை தந்தனர். ​பழனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பக்தர்கள், அடிவாரம் திரு ஆவினன்குடி கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் மலைக்கோயிலுக்குச் சென்று, தாங்கள் கொண்டு வந்த புனித தீர்த்தத்தை கொண்டு தண்டாயுதபாணி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கட்டணம் இல்லா தரிசனம்
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைவரும் எளிதாக தரிசனம் செய்யவும் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அன்றைய தினங்களில் அனைத்து பக்தர்களும் கட்டணமில்லா பொது தரிசன வரிசையிலேயே அனுமதிக்கப் படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ​வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை Dhandayuthapani Swamy Temple கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Related Link
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"

2
23 mins agoshare
vijay attack dmk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved