ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஏர்வாடி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ள நிலையில், மற்றொரு கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள், டாஸ்மாக் கடையை திறந்தால் புல்டோசரை கொண்டு இடித்து தரைமட்டமாக்கி விடுவோம் என எச்சரித்தனர்