மூன்றாவது நாள் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 2 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 ஆம் நாள் திருவிழாவில், முருகபெருமானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.