news-tamil-logo

3/18/2026, 11:48:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெட்ட வெளியில் மண் தரையில்...
tv

Also Watch

tv

Read this

வெட்ட வெளியில் மண் தரையில்...

தென்காசி

Posted on: Feb 09, 2026 09:59 AM

10

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project

முதலியார் பட்டி கிராமத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களே அதிக அளவில் வசிக்கின்றனர். இதன் அருகில் 15 க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இந்தப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது எனவே இங்கு தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது 289 மாணவிகள் 247 மாணவர்கள் என மொத்தம் 536 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 22 பேர் இந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

அம்பாசமுத்திரம் தென்காசி மெயின் ரோட்டில் இந்த பள்ளி அமைந்திருந்தும் கூட, பள்ளியின் வளர்ச்சி என்பது பரிதாப நிலையில் இருந்து வருகிறது அதாவது பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளை வைத்து கொண்டும்m பள்ளி வளாகத்தில் வெட்ட வெளியில் மண் தரையில் மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லி கொடுத்து வருகின்றனர். பள்ளியில் எதிரே இடது புறமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் தனி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கேயும் வகுப்பறைகள் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் சீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களை அந்த கட்டிடத்தில் வைத்து ஆசிரியர்கள் நிலமையை சமாளித்து வருகின்றனர், ஆனால் மேற்கூரைக்கு கட்டிடத்துக்கும் இடையே இடைவெளியுடன் திறந்த வெளியில் இருப்பதால் மழை காலத்தில் மழை நீர்வகுப்பறைக்குள் செல்லும் நிலையும், மேற்கூரை சீட் என்பதால் வெயில் நேரங்களில் மாணவர்கள் கடும் சிரம்ப்பட வேண்டிய நிலையும் உள்ளது.

போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை

இதற்கிடையில் இட வசதி இல்லாததால் இங்கு மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 900 மாணவர்கள் இங்கு பயின்ற நிலையில் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 536 ஆக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற நிலையில் ஒரே ஆண்டில் 100 மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து 536 ஆக குறைந்துள்ளது. வகுப்பறை வசதி மைதான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் இங்கு தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு தயங்குகின்றனர் என்றும் எனவே போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Link
தோசை மாஸ்டராக மாறிய நட்சத்திரம்

தோசை மாஸ்டராக மாறிய நட்சத்திரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved