நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீபெரியநாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியின் ஏழாம் நாள் விழாவினை பக்தர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். இதனையொட்டி, சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, பெரிய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியினை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.