news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒன்றாக திறக்கப்பட்ட பழைய மற்றும் புதிய பாலங்கள்
tv

Also Watch

tv

Read this

ஒன்றாக திறக்கப்பட்ட பழைய மற்றும் புதிய பாலங்கள்

பாம்பன், ராமேஸ்வரம்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Bridge

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பாம்பன் கடலில் உள்ள சாலை பாலம் மற்றும்
ரயில் பாலங்கள்.

இவ்வழியாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் கப்பல்கள் கடந்து செல்வது வழக்கமாகும். இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு பிறகு ஆங்கிலேயர் அமைத்த ரயில் பாலம் மற்றும் புதிய செங்குத்து தூக்கு பாலம் ஆகிய இரண்டு பாலங்களும் ஒன்றாக திறக்கப்பட்டது.

இதன் வழியாக இரண்டு பாய்மரக் கப்பல் சென்றதில் ஒன்று மங்களூரில் இருந்து கடலூருக்கும், மற்றொன்று கடலூரில் இருந்து மங்களூருக்கும், கொச்சியில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா கப்பலும், தென்கடலில் இருந்து வடக்கு கடலுக்கு பகுதிக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலும் கடந்து சென்றது.

கப்பல்கள் கடந்து செல்வதை வெளியூர் மற்றும் வெளிமாவடத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்தனர். ஆங்கிலேயர் அமைத்த நூற்றாண்டுகள் கடந்த பழைய ரயில் தூக்குபாலம் இன்று தான் திறப்பது இறுதி என்றும் அடுத்த வாரத்தில் இருந்து அகற்றப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  சாலையோர கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிக முக்கியத்துவம் வாய்ந்த அறையில் மின்சாரம் துண்டிப்பு

1
3 hrs 16 mins agoshare
நீலகிரி ஸ்டராங் ரூம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved