news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews KGF 3-க்கான திட்டமிடல் தற்போது இல்லை - யாஷ்
tv

Also Watch

tv

Read this

KGF 3-க்கான திட்டமிடல் தற்போது இல்லை - யாஷ்

KGF 3

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
யாஷ்

ரசிகர்களுடன் MR.X திரைப்படம் பார்த்த படக்குழுவினர் :

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா,சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் நடிப்பில் MR.X திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கோவையில் உள்ள தனியார் திரையரங்கில் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தனர். தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கும் படக்குழுவினர் பதிலளித்தனர்.

KGF 3-க்கான திட்டமிடல் தற்போது இல்லை - யாஷ் :

KGF-3 திரைப்படத்திற்கான எந்தவொரு திட்டமிடலும் இல்லை என்றும், தற்போது Toxic, Ramayana மற்றும் Ramayana2 ஆகிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் நடிகர் யாஷ் கூறினார். இது குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டப்பட்டால் நிச்சயம் KGF-3 நிச்சயம் உருவாகும் என்றார்.

பைக் ரேசிங் மைய்யமாக தயாரிக்கப்பட்ட "பைக்கர்" திரைப்படம் :

பைக்கர் திரைபடம் வரும் மே 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அபிலாஷ் ரெட்டி கங்கரா இயக்கத்தில், ஷர்வானந்த் நடிப்பில் உருவான இந்த படம் ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை கராத்தே கல்யாணி பிரகாஷ் ராஜ்க்கு எதிராக புகார் :

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகையான கராத்தே கல்யாணி, பிரகாஷ் ராஜ்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ராமாயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு :

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை, படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இறுதிகட்ட படப்பிடிப்பின் போது பல முக்கிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், குறிப்பாக சிறப்புத் தோற்றங்களில் வரும் நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Link
பிட்னஸ் ரகசியம் குறித்து பேசிய நடிகர் சிம்பு

பிட்னஸ் ரகசியம் குறித்து பேசிய நடிகர் சிம்பு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 31 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved