திருவண்னாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் முறையாக வருவதில்லை என குற்றஞ்சாட்டி, விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் உள்ளே சென்ற விவசாயிகள், அதிகாரிகள் வரும் வரை தரையில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.