சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சியை சேர்ந்த ராஜேந்திரன், தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அந்த சான்றிதழ் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி அலுவலர் பெருமாள், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் ராஜேந்திரன் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.