news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்காச்சோள கதிர்களை அனுப்பி நூதன போராட்டம்
tv

Also Watch

tv

Read this

மக்காச்சோள கதிர்களை அனுப்பி நூதன போராட்டம்

தூத்துக்குடி

18

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தூத்துக்குடி

கோடைகால சிறப்பு நிதியாக விவசாயிகளுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும் என்றும் மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்யவும் வலியுறுத்தி கோவில்பட்டி தபால் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை  அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


1. மக்காச்சோளத்திற்கு செயற்கையான முறையில் விலை குறைப்பை ஏற்படுத்தும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ரூபாய் 2,400 விலையில் அடிப்படையில் தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.

3. நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்தது போல மக்காச்சோளம் மற்றும் நவதானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

4. மகளிருக்கு கோடை காலநிதியாக ரூபாய் 2000 வழங்கியது போல, விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

5. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு மக்காச்சோள கதிர்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனு மற்றும் மக்காச்சோள கதிர்களை தபால் நிலையம் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Link
வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் நிச்சயம் வரும்

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் நிச்சயம் வரும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved