ஈரோடு மாவட்டம் பவானியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 5 பெண்கள், விடுதி மேலாளர் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். பவானி கூடுதுறை சாலையில் உள்ள என்.பி.எல். என்கிற தனியார் விடுதியில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த விடுதியில் உள்ள 5 அறைகளில் இருந்த 5 ஜோடிகளை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வந்தது தெரியவந்தது.