லாரி வாடகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் வருகிற 31ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக முத்துப்பேட்டையில் உள்ள 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, நெல் மூட்டைகளை மன்னார்குடி லாரி உரிமையாளர் சங்கத்தினர் எடுத்துச் செல்வதாக புகார் தெரிவித்தனர். இதனைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல் மூட்டைகளை, லாரிகள் மூலமாக கிடங்குகளுக்கும் வெளி மாவட்ட அரவைகளுக்காக ரயில்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் 450க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரியின் வாடகையை பெறுவதற்கு குறைந்தது 20 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது என்றும் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதையும் பாருங்கள்... லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு | LorryOwnersProtest | TransportStrike | LorryStrike