கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 17அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரியும், கூட்டமைப்பு தலைவர் அந்தோணி செல்வராஜை தற்காலிக பணி நீக்கம் செய்ததை திரும்ப பெறக்கோரியும் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்ததால், தங்களையும் கைது செய்ய கூறி தொழிலாளர்கள் மண்டபத்தில் அமர்ந்தனர்.