தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தியாகராய நகர் தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது மனுதாரரின் புகார்கள் கவனிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.