Also Watch
Read this
மின்சாரம் தாக்கி நேபாளத்தை சேர்ந்த காவலாளி பலி.. புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி
காவலாளி பலி
Updated: Sep 11, 2024 11:11 AM
சென்னை தியாகராய நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தியாகராயநகர் ஜவஹர்லால் நேரு தெருவில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் புதிதாக 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
நேபாளத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் காவலாளி கேசவ் தரைதளத்தில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved