சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளரை வெட்டி கொன்றதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணமங்கலத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சங்கர் காரில் வந்து கொண்டிருந்தபோது, தாயமங்கலத்தை சேர்ந்த முத்துவேல், செல்வகுமார் ஆகியோர் வந்த பைக் மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகராறு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது வாக்குவாதம் முற்றி சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி சங்கரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், முத்துவேல், செல்வகுமார் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.