திருப்பத்தூர் மாவட்டம் பென்னாச்சிஅம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு தண்ணீர் விடச் சென்ற வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சார்ந்த நரசிம்மன், பென்னாச்சி அம்மன் கோவில் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.கட்டடத்திற்கு தண்ணீர் விட சென்ற நரசிம்மன் மோட்டாரை போட்டுவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கியபோது மின்சாரம் தாக்கி தொட்டி நீருக்குள் விழுந்தார்.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நரசிம்மனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.