சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பூந்தமல்லி மகாலட்சுமி நகர் 5-வது தெருவில் வசிக்கும் சந்தனமாரி வீட்டுக்குள் புகுந்த, மாஸ்க் அணிந்த மர்ம நபர், செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.