சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கை அமரன் புதிதாக நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.