திருவண்ணாமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்ததாக தம்பதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சிறுநாத்தூர் சாலையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், பணம் வட்டிக்கு விடுவதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, சுரேஷ், அவரது மனைவி லலிதா, வீட்டு பணிப்பெண் அபிமா உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.