மதுரை அருகே சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரியும், அவரது நண்பரும் நடிகருமான விமல் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்கள் நடனமாடி வைப் செய்தனர். ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ விழாவில், பின்னணி பாடகர்கள் பாடல் பாட, நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் தலையில் முண்டாசு கட்டி ஆடினர்.