மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்சி மண்ணச்சநல்லூரில் இருந்து திருக்கடையூரில் நடைபெறும் பழனியப்பன் என்பவரது 60வது திருமண விழாவிற்கு சென்ற மினிவேன் விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.