தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்ட தமிழிசையையும், பாஜகவையும் 2026 தேர்தலில் மக்கள் காலாவதி ஆக்குவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழிசை நடந்து கொண்ட விதத்தை அவரது தந்தை குமரி ஆனந்தன் பார்த்து இருந்தால், இவருக்கா தமிழிசை என பெயர் வைத்தோம் என்று வருத்தப்பட்டு இருப்பார் என விமர்சித்தார்.