கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டே விஜயின் மாநாட்டுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த அவர், தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு காவல்துறை சார்பில் எந்த கெடுபிடியும் விதிக்கவில்லை என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இபிஎஸ்-சின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பதிலளித்தார்.