Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை , குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் வயலில் டிராக்டரை கொண்டு உழுதும், நாற்றங்காலை நடவு செய்தும் வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தங்கு தடையின்றி பாசனத்திற்கு வரும் வகையில் ஆறு மற்றும் பாசன வாய்கால்களை துரிதமாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved