கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்திரி விவசாயியான 42 வயதான ராஜா என்பவர், தனது 13 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு ராஜா, தனது 2 பிள்ளைகளுடன் செல்போனில் செல்பி எடுத்தும், வீடியோவில் பேசி பதிவு செய்தும், அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், அப்பா கூட சாமிகிட்ட போகிறோம் என பிள்ளைகள் சொல்வது கேட்போரை கண்கலங்க வைக்கிறது.இதையும் படியுங்கள் : குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி திருத்தேர் உற்சவம் ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி உற்சவம்..!