ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வெள்ளி திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ராமர் நீல நிறப்பட்டு உடுத்தி வெள்ளிக்கவசம், திருவாபரணங்கள் சாற்றப்பட்டு, சம்பங்கி, மல்லிகை மற்றும் பஞ்ச வர்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வெள்ளி தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.