Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாயும் மணிமுத்தாறில் இடுப்பளவு தண்ணீர் ஓடும் நிலையில், ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், மேமாத்தூர் கிராம மக்கள் நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் நிலை உள்ளது. மேமாத்தூரில் இருந்து நல்லூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆற்றை கடந்தே செல்ல வேண்டும் என்ற நிலையில், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கி 5 மாதங்களாகியும் பாலம் கட்டும் பணி துவங்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved