சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில், மாடு முட்டி ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி கிராமங்களில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டி போட்டி நடத்தப்பட்டது. கொண்டையம்பள்ளி மஞ்சு விரட்டில், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடு ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து, வினிதா என்ற பெண்ணை வயிற்று பகுதியில் குத்தி தூக்கி எறிந்தது. செந்தாரப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் அவிழ்க்கப்பட்ட மாடு முட்டியதில், சக்திவேல் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.இதையும் படியுங்கள் : ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசை